ஒரு வழியாக நான்கு விமானங்கள் மாறி காலை சென்னை வந்தடைந்தேன். வான்வழிப் பயணம் போதிய அலுப்பை கொடுக்கவே, பகலை சென்னையில் கழித்துவிட்டு இரயில் மார்க்கமாக திருச்சி செல்ல முடிவு செய்தாகிவிட்டது. முதலில் பொருட் கொள்வனவு(shopping), நண்பர்களையும் சந்தித்து விட்டு நான் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று அறையை காலி செய்துவிட்டு இரவு போஜனத்தை முடிக்கும் நோக்கில் வரவேற்ப்பறை சென்ற எனக்கு இன்ப அதிர்ச்சி. வரவேற்ப்பில் என்னுடைய பால்ய பள்ளித்தோழன் ஹென்றி டேனியல். என்னுடன் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்ற தோழன். அதேதினம் காலை மும்பையிலிருந்து சென்னை வருவதற்க்காக விமானநிலையத்தில் விமானநிலைய வளாகத்தினுள் சுழலும் பேருந்தில் சக பயணிகளுடன் ஏறிக்கொண்டிருக்கையில் சில இளைஞர்கள் தமிழில் பேசிக்கொண்டிருந்தது எனது கவனத்தை ஈர்த்தது. நண்பர்கள் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்தவண்ணம் இருக்கவே, ஒருவர் மட்டும் தனியாக நின்றுகொண்டிருந்த மற்றொரு புதிய இளைஞனை பார்த்து ஆச்சர்யத்துடன் தன்னை அறிமுகம் செய்தவண்ணம் வினவிக்கொண்டிருந்தார். அவர்களுடைய உரையாடலை வைத்து அவர்கள் கல்லூரி தோழர்கள் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. அதுமட்டுமல்லாமல் கல்லூரி நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் சந்தித்துக்கொள்கிறார்கள் என்பதையும் உணரமுடிந்தது. நானும் இதைப் போன்று பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு எப்போது கிடைக்குமோ என்று யோசித்தவாறு விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தேன், ஆனால் அன்று இரவே இப்படியொரு ஆச்சர்யம் சென்னையில் எனக்காக காத்துக்கொண்டிருப்பதை உணராதவனாக.
குறிப்பாக எனது ஆறாம் வகுப்பில் நாங்கள் ஐந்து நபர்கள் அமர்ந்திருக்கும் நீள இருக்கையின் குழுத்தலைவன் ஹென்றி, நன்றாக படிக்கக்கூடிய மாணவன், வகுப்பில் குறைந்தபட்சம் எட்டாவது இடத்தையாவது தக்கவைத்துக்கொள்ளக்கூடிய ஒருவன் குறைந்தது ஐந்திற்க்கு மூன்று பாடங்களையாவது தவறவிடும் எனக்கு குழுத்தலைவனாக இருக்கும் தகுதி இருக்காதா என்ன?
வகுப்பாசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்குக் கொடுத்த வீட்டுப்பாடங்களை குழுத்தலைவர்கள் வாயிலாகவே சரிபார்ப்பர். குழுத்தலைவர்கள் தங்களது அங்கத்தினரின் வீட்டுப்பாடங்களை சரிபார்ப்பதும், குழுத்தலைவர்களின் வீட்டுப்பாடங்களை வகுப்பாசிரியர்கள் சரிபார்ப்பதும் வழக்கம். எனது வகுப்பில் உச்சகட்ட லஞ்ச லாவண்யங்களை அறிமுகம் செய்து வைத்த பெருமை என்னையே சாரும். ஹென்றி எங்களுடைய வீட்டுப்பாடங்களை சரிபார்ப்பதற்கு முன்னர் நான் ஹென்றியை சரிபார்த்துவிடுவது வழக்கம். பால்பன், இலந்தை பழம், பப்ஸ்டிக் ஐஸ், சீவல் ஐஸ், நரிப்பழம், சோளக்கதிரு, உப்பு மாங்காய், தேன் மிட்டாய் போன்ற பட்சணங்களைக் கொடுத்து வீட்டுப்பாடத்தை பூர்த்தி செய்துவிடுவேன். இதை அறிந்த என்னைப்போலவே வர்த்தக முறையில் வீட்டுப்பாடங்களை சமன் செய்யும் வகுப்பு தோழர்கள் நான் சந்தையை சீர்குலைப்பதாக குறைகூறும் அளவிற்க்குக் கவனிப்பிற்க்குள்ளாகிவிட்டேன்.
ஆனால் காலச்சுழற்ச்சி சற்று பலமாக மாறி, எட்டாம் வகுப்பில் நான் ஹென்றியின் குழுத்தலைவனாக மாறக்கூடிய சூழ்நிலை அமைந்துவிட்டது. செய்த உதவிக்கு கைம்மாறு செய்யும் நோக்கில் ஹென்றிக்கு உதவி செய்யும் பொருட்டு, எழுதாத வீட்டு பாடத்தை எழுதி முடித்துவிட்டதாக வகுப்பாசிரியரிடம் கூறி பொய்யை மெய்ப்படுத்த முடியாமல் பிரம்படி வாங்கிய தருணங்களும் உண்டு. நாங்கள் இருவரும் எட்டாம் வகுப்புவரையே ஒன்றாக படித்தோம், பிறகு ஹென்றி வேறு பள்ளிக்கு சென்றுவிட, எங்களுடைய தொடர்பு அத்துடன் அறுந்துவிட்டது. சுமார் பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் சந்தித்துகொள்கிறோம். பதினாறு ஆண்டுகள் அல்ல முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக்கொண்டாலும் எங்களால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியும். பள்ளிப்பருவ நட்பு என்பது அத்துணை நெருக்கமானது.
எங்கோ படித்த ஞாபகம்
பச்சைப் பாயில் படுத்தாலும்

பாடை யிலிட்டாலும்
பள்ளிபருவ நினைவுகள்
பசுமரத்தாணிதான்......
ஜம்ஷீது,
ஜம்ஷீது,
சென்னை - திருச்சி இரயில் பயணம்,
29/11/2008.